ஓசூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


ஓசூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x

ஓசூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் மீர்கத்தியனூரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஷஸ்வினாதேவி (வயது 26). இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதியமான் தெருவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷஸ்வினாதேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று புதுப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமாகி 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story