அக்காள் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


அக்காள் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கருப்பூர் அருகே அக்காள் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கருப்பூர்

கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அகராதிபட்டணத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 24), கூலித் தொழிலாளி. இவருடைய அக்காள் அய்யம்மாள் திருமணமாகி ஈரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அய்யம்மாள் ஈரோட்டில் கடந்த 27-ந் தேதி சாலை விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடல் சொந்த ஊரான வெள்ளாளப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அக்காளின் உடல் தகனம் செய்யப்பட்ட சுடுகாடு பகுதியில் கடந்த 2 நாட்களாக மணிகண்டன் சோகமாக சுற்றி வந்துள்ளார். நேற்று தேக்கம்பட்டி சுடுகாட்டின் அருகில் இருந்த பெரியாண்டிச்சி அம்மன் மீது சாத்தப்பட்டு இருந்த சேலையை எடுத்து அங்குள்ள மரத்தில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அக்காளின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story