கொண்டலாம்பட்டி அருகேகிணற்றில் குதித்து தொழிலாளி சாவு
சேலம்
கொண்டலாம்பட்டி
கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 29). இவர் செங்கல் சுமை தூக்கும் தொழிலாளி. இவர் இரவில் .வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் பார்த்த போது அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் நாகராஜ் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். நாகராஜ் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரது உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story