கரும்பு அறுவடை பணிகள் மும்முரம்


கரும்பு அறுவடை பணிகள் மும்முரம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் கரும்பு அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரத்தில் கரும்பு அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அறுவடைக்கு தயாரான கரும்புகள்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதையொட்டி அறுவடைக்கு தயாரான கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு துறை அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

நேரடி கொள்முதல்

அதன்படி விக்கிரமசிங்கபுரம் பகுதியிலும் அதிகாரிகள் முகாமிட்டு விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் தோட்டங்களில் கரும்பு வெட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

6 அடி நீளமுள்ள கரும்புகளை தொழிலாளர்கள் வெட்டி, கட்டுகளாக கட்டி லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பல்வேறு இடங்களிலும் கரும்பு அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story