கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டறை கூட்ரோடு பகுதியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் டி.கோவிந்தன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.கோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பி.குணசேகரன், பா.சாமிநாதன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், எம்.சகாதேவன், எம்.சிவஞானம், ஆர்.ரவி, கே.சேகர் உள்பட ஏராளமானோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 300 நாட்களாக தஞ்சையில் போராடிவரும் கரும்பு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளின் போராட்டத்தில் தாக்குதல் நடத்தி, மாநில பொது செயலாளர் ரவீந்திரன் உள்பட விவசாயிகளை கைது செய்த காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பீடி தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், கறிக்கோழி வளர்ப்பு சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story