திருவாரூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்
திருவாரூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்
திருவாரூர் புறவழிச்சாலை மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேம்பாலம்
திருவாரூர் புறவழிச்சாலையில் ெரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான கனரக வாகனங்களும், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் ெடுஞ்சாலைத்துறையினர் இப்பாலத்தில் பராமரிப்பு பணிகளை செய்து பராமரித்து வருகின்றனர்.
திடீரென பள்ளம்
நேற்று மாலை இந்த பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர். உடனடியாக இந்த பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.