நொய்யல் ரெயில்வே கேட் திடீர் பழுது
நொய்யல் ெரயில்வே கேட் திடீர் பழுதானதால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே கேட் மூடல்
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக ெரயில்வே இரும்பு பாதை செல்கிறது. இந்த இரும்பு பாதை வழியாக சென்னை, திருச்சி, கரூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ஈரோடு, கோவை, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிவிரைவு ெரயில்களும், சாதாரண பயணிகள் ெரயில்களும், பல்வேறு வகையான சரக்கு ெரயில்களும் சென்று வருகின்றன. ெரயில்கள் இருபுறமும் வரும்போது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னர் ெரயில்கள் வரும்போது நொய்யலில் சாலையின் குறுக்கே உள்ள 2 ெரயில்வே கேட்களும் மூடப்படும்.
ெரயில்கள் சென்ற பிறகு சில நிமிடங்களில் மீண்டும் ெரயில்வே கேட் திறக்கப்பட்டு அந்த தார் சாலை வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார்் 3 மணிக்கு மேல் அந்த வழியாக ெரயில் வந்தபோது ெரயில்வே கேட் மூடப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
ெரயில் சென்று சில நிமிடங்களில் மீண்டும் ெரயில்வே கேட்டை திறக்க முயன்ற போது ெரயில்வே கேட் திறக்கவில்லை. கேட் பழுதடைந்து விட்டது. அதன் காரணமாக நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை சுமார் 10 மணி வரை கோவை, ஈரோடு, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ெரயில்வே கேட் வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், கார்கள் வேன்கள் லாரிகள் இருசக்கர வாகனம் என எந்த வாகனமும் செல்ல முடியாமல் நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம் பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு, கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை வழியாக சென்றன. இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சீரமைப்பு
ெரயில்வே துறையை சேர்ந்த ஊழியர்கள் நேற்று காலை விரைந்து வந்து மூடப்பட்டிருந்த இரண்டு ரயில்வே கேட்டுகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காலை சுமார் 10 மணிக்கு மேல் நொய்யல் ெரயில்வே கேட் சீரமைக்கப்பட்டு அந்த வழியாக இருபுறமும் அனைத்து வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரை சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.