கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்


கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 9 April 2024 1:14 PM IST (Updated: 9 April 2024 3:24 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கடலில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

குமரி,

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல்நீர் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும் பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். மேலும் கடலில் இறங்கி குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

கடல்நீர் உள்வாங்கியதை அடுத்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கப்பட்டது. மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்கரை பகுதிகள் மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது.


Next Story