ஆன்லைன் சேவை மையத்தில் திடீர் தீ


ஆன்லைன் சேவை மையத்தில் திடீர் தீ
x

குரவப்புலத்தில் ஆன்லைன் சேவை மையத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். பா.ஜ.க.வை சேர்ந்த இவா், குரவப்புலம் கடைத்தெருவில் கூரை கொட்டகையில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஆன்லைன் சேவை மையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறையினர், நிலைய அலுவலர் கந்தசாமி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் ஆன்லைன் சேவை மையம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் ஆன்லைன் சேவை மையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story