மூச்சுதிணறல் ஏற்பட்ட ஆண் குழந்தை திடீர் சாவு


மூச்சுதிணறல் ஏற்பட்ட ஆண் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 17 Jun 2023 1:30 AM IST (Updated: 17 Jun 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

மூச்சுதிணறல் ஏற்பட்டு ஆண் குழந்தை திடீரென உயிரிழந்தது.

மதுரை


மதுரை மேல அனுப்பானடி சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 29). இவருடைய குழந்தை சுடலை காளி. இந்த குழந்தை பிறந்து 40 நாட்களே ஆனது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மயங்கிய குழந்தையை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story