சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை திடீர் சாவு; கணவர் மீது போக்சோ வழக்கு


சிறுமிக்கு  பிறந்த ஆண் குழந்தை திடீர் சாவு; கணவர் மீது போக்சோ வழக்கு
x

சேரன்மாதேவி அருகே சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை திடீரென இறந்தது. இதுதொடர்பாக கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே கரிசல்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஸ்வஜித் பகாரியா (வயது 22) என்பவர் தனது மனைவியுடன் இங்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அவரது கர்ப்பிணி மனைவியை அனுமதித்தார். 7 மாத கர்ப்பிணியான அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், விஸ்வஜித் பகாரியாவின் மனைவிக்கு 14 வயது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது கணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story