22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்

22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி மத்திய மண்டலத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் டி.ஜோதி கரூர் மாவட்டம் லாலா பேட்டை போலீஸ் நிலையத்துக்கும், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கே.ஈஸ்வரன் வெங்கமேடு போலீஸ் நிலையத்துக்கும், அவருக்கு பதிலாக கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் திருவையாறு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலையத்துக்கும், விராலிமலை இன்ஸ்பெக்டர் பத்மா கீரனூர் போலீஸ் நிலையத்துக்கும், திருச்சி மாவட்ட ஏசிடியு இன்ஸ்பெக்டர் யசோதா, பாலவிடுதி போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த திருவெறும்பூர் மதுவிலக்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், தொட்டியம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், மாத்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்துக்கும், புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் அறந்தாங்கி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி, ஆலங்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிசாமி, கீரமங்கலத்துக்கும், கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மணSudden change of 22 police inspectorsமேல்குடிக்கும், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் கீழப்பழுவூருக்கும், ஆலங்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஹேமலதா இலுப்பூருக்கும், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரிமன்னன், வடகாடு போலீஸ் நிலையத்துக்குமு், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு கே.புதுப்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் மணப்பாறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மணமல்லி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, கரூர் மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்துக்கும், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பேபி மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கும், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி தொட்டியத்துக்கும், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மாத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.