சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
ஆழ்வார்குறிச்சி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
தென்காசி
கடையம்:
ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற காக்கும் பெருமாள் சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் கொடை விழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கொடை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சிவனைந்த பெருமாள் பூஜை, தெப்பக்குள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம், பட்டாணிபாறையில் இருந்து பழம் எறிதல் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து உச்சிக்கால கொடையும், அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் இரவில் சாமக்கொடை ஊட்டுகளம் அர்த்தசாம பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story