வறுமையின் கொடுமையால் தங்கையின் மகளுடன் வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்ெகாலை
காங்கயம் அருகே ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த மூதாட்டி வறுமையின் கொடுமையால் தங்கையின் மகளுடன் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
காங்கயம் அருகே ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த மூதாட்டி வறுமையின் கொடுமையால் தங்கையின் மகளுடன் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீரமுத்துவும், அவருடைய மகனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். இதனால் லட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் லட்சுமியின் தங்கையும், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளான கலாமணியை லட்சுமியின் பராமரிப்பில் விட்டிருந்தார்.
இதனால் லட்சுமியும், கலாமணியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். லட்சுமிக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வறுமை அவரை துரத்தியது. வருமானத்திற்கு போதிய வழியில்லாததால் அவரால் மன நலம் பாதிக்கப்பட்ட கலாமணியையும் சேர்த்து பார்த்துக்கொள்ள இயலவில்லை. இதனால் கலாமணியை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட முயற்சி செய்து வந்தார். இந்த சூழலில் வேலைக்கும் போகமுடியாமல் வறுமையில் வாடி வந்த லட்சுமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் காங்கயம் அருகே மடவிளாகம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலில் அடுத்தடுத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் லட்சுமியும், கலாமணியும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வறுமையின் கொடுமையால் இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.