பூலித்தேவன் சிலைக்கு வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை


பூலித்தேவன் சிலைக்கு வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் சிலைக்கு அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு அவரது வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் பூலித்தேவனின் குலதெய்வமான உள்ளமுடையார் சாஸ்தா கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் வந்து பூலித்தேவன் சிலைக்கு அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கோமதி முத்துராணி துரைச்சியின் கணவர் பாண்டியராஜா, மூத்த மகன் சிவகுமாரசாமி துரை, இளைய மகன் வக்கீல் சிபி உள்ளமுடையார் துரை ஆகிய இரு மகன்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவில் ஏழை-எளிய மக்கள் 1000 பேருக்கு இலவச சேலைகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாமன்னர் பூலித்தேவன் ஆண்ட காலத்தில் அவரை எதிர்த்து ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அரண்மனை சிதிலமடைந்திருந்ததால் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் தற்போது உள்ளது. அதை திரும்ப இப்பகுதி அரண்மனைக்கு கொண்டு வந்து பூலித்தேவனின் புகழை உலகமெங்கும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story