தரமற்ற அரிசி மூட்டைகள் கண்டுபிடிப்பு; அரிசி ஆலைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய உணவு கழகம் பரிந்துரை


தரமற்ற அரிசி மூட்டைகள் கண்டுபிடிப்பு; அரிசி ஆலைகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய உணவு கழகம் பரிந்துரை
x

கும்பகோணம் மற்றும் மணப்பாறையில் உள்ள 2 அரவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய உணவு கழகம் பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சாவூர்,

இந்திய உணவு கழக அதிகாரிகள் கும்பகோணத்தில் இயங்கும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் மக்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற அரிசி மூட்டைகள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய உணவு சட்டத்தின்படி, 5 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்றாத மணப்பாறை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 2 அரவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த அரவை ஆலைகளை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் இந்திய உணவு கழகம் பரிந்துரை செய்துள்ளது. தரமற்ற அரிசி மூட்டைகளை வாங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்திய உணவு கழகம் பரிந்துரைத்துள்ளது.


Next Story