அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக ேவளாண் அதிகாரி கூறினார்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக ேவளாண் அதிகாரி கூறினார்.
பயிற்சி
கும்பகோணம் வட்டார தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை உதவி இயக்குனர் தேவிகலாவதி உத்தரவின் பேரில் கும்பகோணம் வட்டாரம் கீழ பழையாறை கிராமத்தில் வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன் பருவ பயிற்சி நடந்தது.
இதற்கு கீழ பழையாறை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரகாஷ் வரவேற்றார். கும்பகோணம் வேளாண்மை அலுவலர் அசோக் ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'தற்போது உள்ள திட்டங்கள் மற்றும் காலநிலைகள் பருவ நிலைகளுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.
மானியம்
கும்பகோணம் துணை வேளாண்மை அலுவலர் சாரதி நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர், 'அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு பண்ணை குடும்பத்திற்கு தலா 2 தென்னை கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 50 சதவீத மானியத்தில் ஜிங் சல்பேட், மண்வெட்டி, கடப்பாரை, களைகொத்து, கதிர் அரிவாள், இரும்பு பாண்டு, கைத்தெளிப்பான், பவர் ஸ்பிரேயர், ஆகியவை வழங்கப்பட உள்ளது.
மேலும் நுண்ணீர் பாசன திட்டத்தில் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் ஆயில் என்ஜின் பம்பு செட் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர் இளமதி செய்து இருந்தார். முடிவில் அட்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் நன்றி கூறினார்.