விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம்


விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம்
x

பரமத்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் நிலக்கடலை, சோளம், உளுந்து வினியோகம் செய்யப்படுகிறது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி14, கதிரிலப்பாக்ஸி 1812, பி.எஸ்.ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வட்டார வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story