விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள்


விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள்
x

73 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்களை கலெக்டர் ெஜயசீலன் வழங்கினார்.

விருதுநகர்


73 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்களை கலெக்டர் ெஜயசீலன் வழங்கினார்.

வேளாண் எந்திரங்கள்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் எந்திர மயமாக்கும் துணை இயக்கத்திட்டத்தின் கீழ் 73 விவசாயிகளுக்கு ரூ.60.69 லட்சம் மானியத்தில் 69 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசைக்களையெடுக்கும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் எந்திரங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்துவரும் விவசாயிகளின் நில உடமைகளை கருத்தில் கொண்டு சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் ஒரு கிராமத்திற்கு 2 பவர் டில்லர் எந்திரங்கள் என்ற அடிப்படையில் கிராமங்களுக்கு ரூ.48 கோடி மானியத்தில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

உழவு பணி

அதன்படி முதல்-அமைச்சர் குறைந்த அளவு பரப்பில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுடன் சிறிய பகுதியிலான வேளாண் எந்திரங்களை கொண்டு உழவு பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முதல் கட்டமாக ரூ. 36 கோடி மானியத்தில் 397 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் மற்றும் 295 விவசாயிகளுக்கு விசை களை எடுக்கும் கருவிகளை 4,200 விவசாயிகளுக்கு இக்கருவிகளை வழங்கும் விதமாக இரண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான் கருவிகளை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

களை எடுக்கும் கருவி

இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் 73 விவசாயிகளுக்கு 60 பவர் டில்லர் மற்றும் 4 விசை களை எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story