பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து மரணம்
பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து இறந்தார்.
சென்னை
சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 56). இவர் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் 2 மாத மருத்துவ விடுப்புக்கு சென்று இருந்த நிலையில், கடந்த 5-ந் தேதி பணிக்கு திரும்பினார்.இதற்கிடையே, பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போது நேற்று திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார் உடனே அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு கீதா என்ற மனைவியும் யஸ்வந்த் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story