கரூர்- ஈரோடு இடையே இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு


கரூர்- ஈரோடு இடையே  இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு
x

கரூர்- ஈரோடு இடையே இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடக்கிறது என சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.

கரூர்

ரூ.34 கோடி மதிப்பீடு

நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்களை ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தும் பணியினை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கரூர் ரெயில் நிலையமானது ரூ.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கரூர் ரெயில் நிலையத்தை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேற்று ஆய்வு செய்தார். இதனையொட்டி அவர் சிறப்பு ரெயில் மூலம் அதிகாரிகளுடன் கரூர் ரெயில் நிலையத்திற்கு வருகைபுரிந்தார். பின்னர் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் நிலைய நடைமேடை, ரெயில் நிலைய முன்பகுதி, பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அம்ரித் திட்டத்தின்கீழ் செயல்டுத்தப்பட உள்ள வரைப்படங்களை பார்த்து, அதுகுறித்து விளக்கங்களை கேட்டறிந்தார்.

ஆய்வு பணி

பின்னர் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

அம்ரித் பாரத் திட்டத்தில் கரூர் ரெயில் நிலையம் தேர்வாகியுள்ளது. இதுதொடர்பான பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூரில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்கும் திட்டம் தற்போது இல்லை. கரூர்- ஈரோடு இடையே இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.


Next Story