மேயர் சரவணன் ஆய்வு


மேயர் சரவணன் ஆய்வு
x

நெல்லை டவுனில் மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் 23-வது வார்டு பாட்டப்பத்து பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லி தளம் போடும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது. இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது கவுன்சிலர் நித்தியபாலையா, உதவி செயற்பொறியாளர் பைஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story