மொரப்பூர்-தர்மபுரி ரெயில் திட்ட அளவீடு பணியை செந்தில்குமார் எம்.பி. ஆய்வு


மொரப்பூர்-தர்மபுரி ரெயில் திட்ட அளவீடு பணியை செந்தில்குமார் எம்.பி. ஆய்வு
x

மொரப்பூர்-தர்மபுரி ரெயில் திட்ட அளவீடு பணியை செந்தில்குமார் எம்.பி. ஆய்வு செய்தார்.

தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர்-தர்மபுரி ரெயில் திட்ட அளவீடு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செந்தில்குமார் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார்கள் கலைச்செல்வி, சுப்பிரமணி, மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன் மற்றும் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன் நெப்போலியன், சிவப்பிரகாசம், பேரூராட்சி தலைவர்கள் மணி, வடமலை முருகன், கடத்தூர் நகர செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி, சசிகுமார், ஊராட்சி தலைவர்கள் ராஜா, பத்மாவதி சரவணன், காந்தி, விஜயா சங்கர், ஆதிமூலம், ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரி பழனி மற்றும் ரெயில்வே பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் செந்தில்குமார் எம்.பி கூறுகையில், மொரப்பூர்-தர்மபுரி ரெயில் திட்ட அளவீடு பணிகள் அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் முடிவடைந்து விடும். மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அளவீடு மற்றும் ஆய்வு பணிகள் முடிந்தவுடன் மாநில அரசு நிதியை ஒதுக்கீடு செய்யும். அளவீடு பணிக்காக வருவாய்த்துறையில் 13 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பின் மொரப்பூர்-தர்மபுரி இடையே கட்ட வேண்டிய பாலங்கள் குறித்து ஆய்வு நடைபெறும். இந்த பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று கூறினார்.


Next Story