சைக்கிள் நிறுத்த இடமின்றி மாணவர்கள் அவதி


சைக்கிள் நிறுத்த இடமின்றி மாணவர்கள் அவதி
x

நாரணாபுரம் அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்த இடமின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

நாரணாபுரம் அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்த இடமின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

அரசு பள்ளி

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட நாரணாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர்களில் இருந்து தினமும் சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள் தங்களது சைக்கிள்களை பள்ளியின் உள்ளே நிறுத்த போதிய இடம் இல்லை. பள்ளியின் வெளியே சைக்கிள் நிறுத்த போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் தங்களது சைக்கிள்களை பள்ளியின் வெளியே வெயிலில் நிறுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

சைக்கிள் நிறுத்தும் இடம்

தொடர்ந்து 8 மணி நேரம் சைக்கிள்கள் வெயில் மற்றும் மழையில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி சைக்கிள்களில் பழுது ஏற்படுகிறது. இதனால் தொலைத்தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.

எனவே சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரிகள் இந்த பள்ளிக்கு தேவையான சைக்கிள் நிறுத்தும் இடத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் போத்தீசீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story