போக்குவரத்து ெநரிசலால் மாணவர்கள் அவதி


போக்குவரத்து ெநரிசலால் மாணவர்கள் அவதி
x

ஆலங்குளத்தில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இருபுறமும் வாகனங்கள்

ஆலங்குளம், கொங்கன்குளம், கரிசல்குளம், அப்பயநாயக்கர்பட்டி உள்பட 12 ஊராட்சிகளுக்கு மத்தியில் ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோடு அமைந்துள்ளது.

இங்கு காலை 6 மணி முதல் 8 மணி வரை சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துர், திருவேங்கடம ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி பஸ்களும், பள்ளிகளுக்கு செல்லும் பஸ்களும், பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் பஸ்களும், சிமெண்டு ஆலைகளுக்கு வரும் வாகனங்களும் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது.

போக்குவரத்து போலீசார்

அதேபோல பஸ்நிலையம் இல்லாததால் சாலையின் இருபுறமும் பஸ்களும் நிறுத்தப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் இருந்து ெகாண்டு இருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள், மாணவர்கள் சாலையை கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story