மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும்-நிரந்தர மக்கள் கோர்ட்டு தீர்ப்பு


மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும்-நிரந்தர மக்கள் கோர்ட்டு தீர்ப்பு
x

மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என நிரந்தர மக்கள் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே இட்டேரியைச் சேர்ந்த பொன்னரசி, நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், ''எனது கணவர் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். எனது 2 மகன்களையும் நெல்லையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்து கொண்டிருந்தோம். எனது கணவர் இறந்த பின்னர் கல்வி கட்டணம் செலுத்த போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால் ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தோம். எனது மகன்களுக்குரிய மாற்றுச் சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகம் தர மறுக்கிறார்கள். இதனால் பாடப்புத்தகம் மற்றும் இதர அரசு சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே மாற்றுச் சான்றிதழ்களை பெற்று தர வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சமீனா, தனியார் பள்ளி முதல்வருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளி நிர்வாக இயக்குனர், முதல்வர் ஆகியோர் ஆஜராகி, 2 மாணவர்களின் மாற்று சான்றிதழ்களையும் நீதிபதியிடம் ஒப்படைத்தனர். அந்த மாற்றுச்சான்றிதழ்களை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா நேற்று பொன்னரசியிடம் வழங்கினார்.


Next Story