பிரிவு உபசரிப்பு விழாவில் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்
பிரிவு உபசரிப்பு விழாவில் பெற்றோர்களுக்கு, மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.
மதுரை
திருப்பரங்குன்றம்
மதுரை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் சரவணன், செயலர் கண்ணன், இயக்குநர் நடன குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் முறை பற்றி ஆசிரியர்கள் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக மாணவர்கள் பெற்றோர்களை நாற்காலியில் உட்கார செய்து பாதங்களை தண்ணீரில் கழுவி சந்தனம், குங்குமம் வைத்து, கழுத்தில் பூ மாலை போட்டு காலில் விழுந்து வணங்கினர். அப்போது பெற்றோர் தங்களது மகன்களுக்கு நெற்றில் பொட்டுவைத்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story