பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும்-தொல்லியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்


பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும்-தொல்லியல் ஆய்வாளர் அறிவுறுத்தல்
x

பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.

ராமநாதபுரம்

தொண்டி,

பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.பழங்கால பொருட்களை அடையாளம் கண்டு மாணவ-மாணவிகள் ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் கூறினார்.

ெதாடக்க விழா

தொண்டி அருகே உள்ள கொடிப்பங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை முத்துலட்சுமி தலைமை தாங்கினார். தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். மாணவன் செங்கதிர்ச்செல்வன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வெட்டு

தமிழ்நாட்டின் கால்பகுதி கடற்கரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதால் இயற்கை துறைமுகங்களும் உப்பங்கழிகளும் நிறைந்த இங்கு, ரோமானியர், யூதர், சீனர் உள்ளிட்ட வெளிநாட்டு வணிகர்கள் வணிகம் செய்தனர். அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான வணிகக்குழுவினர் தீர்த்தாண்டதானம் கோவில் மண்டபத்தை பராமரித்த கல்வெட்டு செய்தி உள்ளது. ஆனால் அந்த மண்டபமும், கல்வெட்டும் அழிந்து போயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்கி முழு வீச்சில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொல்லியலை பள்ளி மாணவர்கள் கற்றுக்கொண்டு, உள்ளூரில் உள்ள தொல்லியல் தடயங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாணவி அபிநயாஸ்ரீ நன்றி கூறினார். பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக்கருவிகள், கருப்பு, சிவப்புநிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோவில்கள், கற்றளிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.


Next Story