அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய 3 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 2023-ம் கல்வி ஆண்டில் படிக்க மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மாணவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிற 7-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை பெறவும், விண்ணப்பங்களை இலவசமாக பதிவு செய்திடவும்
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் (04149-294339,9944618626), சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் (9442867335), சின்னசேலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் (9499055857) மற்றும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.