விஷம் குடித்து மாணவர் தற்கொலை


விஷம் குடித்து  மாணவர் தற்கொலை
x

தியாகதுருகத்தில் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் உதயமாம்பட்டை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் கார்த்திகேயன்(வயது 19). இவர் திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கோவில் திரு விழாவுக்காக ஊருக்கு வந்திருந்த கார்த்திகேயனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டார். உடனடியாக அவர், சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story