மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
x

குன்னூர், பந்தலூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே சோகத்தொரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. பள்ளியில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தலைமை ஆசிரியை தொடங்கி வைத்தார். பேரணியின் போது ஆசிரியைகள் சுசிலா, புஷ்பா, ேஹமலதா, சித்ரா மற்றும் மாணவர்கள் வீடு, வீடாக சென்று அரசு பள்ளியின் சிறப்புகள், நலத்திட்டங்கள், அரசின் சலுகைகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசு பள்ளியில் வாணிவிலாஸ், நேர்கம்பை, சோகத்தொரை, சக்கலட்டி, மந்தலா, ஆண்டி ஒலா போன்ற பகுதிகளில் இருந்து 37 மாணவர்கள் படித்து வருகின்றனர். விழிப்புணர்வு பேரணி மூலம் முதல் வகுப்புக்கு புதிதாக 2 மாணவிகள் சேர்ந்தனர். அந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் பந்தலூர் அருகே பாட்டவயல் அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவ-மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ராஜாராம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story