தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை


தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை
x

தடகள போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகள் திருவண்ணா மலையில் நடந்தது.

இதில் பரமக்குடி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி மதுமிதா 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்து முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் சரண் என்ற மாணவன் சாதனை படைத்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ரோஸ், பள்ளியின் முதல்வர் ரெஜினா மேரி, மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story