எருமப்பட்டியில் கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி கதி என்ன? தேடும் பணி தீவிரம்


எருமப்பட்டியில்  கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி  கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x

எருமப்பட்டியில் கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி கதி என்ன? தேடும் பணி தீவிரம்

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டியில் உள்ள ெகாக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய இளைய மகள் ஜீவிதா (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை ஜீவிதா கல்லூரி முடிந்து சிங்களம் கோம்பை அருகே உள்ள பகுதிக்கு பஸ்சில் வந்து இறங்கினார். அங்கு அவருடைய தாய் கவிதா மொபட்டுடன் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து தாய், மகள் 2 பேரும் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் எருமப்பட்டி அருகே கொக்கு பாறை ஓடை பகுதியில் சென்றனர். அந்த ஓடையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் மொபட்டை நிறுத்திய அவர்கள் தண்ணீரில் இறங்கி நடந்து சென்றனர். அந்த சமயம் 2 பேரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற நிலையில் கவிதா அருகில் இருந்த செடியை பிடித்து கொண்டார்.

தேடும் பணி தீவிரம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் செடியை பிடித்திருந்த கவிதாவை மீட்டனர். ஜீவிதாவை ஓடை தண்ணீர் இழுத்து சென்றது. இதுகுறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஓடையில் இழுத்து செல்லப்பட்ட ஜீவிதாவை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலையில் தான் மாவட்ட கலெக்டர், நாமக்கல் உதவி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கொக்கு பாறை பகுதியை பார்வையிட்டு ஆய்வு சென்றது குறிப்பிடத்தக்கது. ஓடை நீரில் கல்லூரி மாணவி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.


Next Story