தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்
x

மல்லசமுத்திரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

திருச்செங்கோடு

மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பட்டினி போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவி கோரிக்கை உரையாற்றினார். இதில் தனி ஊதியம் மற்றும் சிறப்பு படியை தணிக்கை தடைகளை புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஆசிரியர்களுக்கு அனுமதிக்க வேண்டும். பறிக்கப்பட்டுள்ள ரூ.750 தனி ஊதியத்தை தர ஊதிய மாற்றமின்றி பணியாற்றும் தேர்வுநிலை இடைநிலை ஆசிரியருக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மறுக்கப்பட்டுள்ள ரூ.500 சிறப்பு படியை இடைநிலை தேர்வுநிலை, சிறப்புநிலை ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஆசிரியர் குறைதீர் சிறப்பு முகாம் திட்டத்தி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகான வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செந்தில் வடிவு, மாவட்ட மதிப்புறு தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருகசெல்வராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story