கருப்பூர், மேட்டூரில்தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம்கருப்பு கொடிகட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்


கருப்பூர், மேட்டூரில்தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம்கருப்பு கொடிகட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்
x

கருப்பூர், மேட்டூரில் தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

சேலம்

சேலம்

கருப்பூர், மேட்டூரில் தொழிற்சாலைகளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

கருப்பூர்

சேலம் கருப்பூர் பகுதியில் மகளிர் தொழில் பூங்கா (தொழில் பேட்டையில்) ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர் கூட்டமைப்பின் சார்பில் கடந்த மாதம் உற்பத்தியை நிறுத்தி ஒருநாள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் மீண்டும் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழிற்சாலைகளின் முன்பு கருப்பு கொடிகளை கட்டி தங்களின் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலெக்டரிடம் மனு

தொடர்ந்து மகளிர் தொழில் பேட்டை சங்க தலைவர் மகேஸ்வரி தலைமையில் செயலாளர் பிரியங்கா, துணைச்செயலாளர் சுமதி, பொருளாளர் செல்வி, போராட்ட ஒருங்கிணைப்பாளர் சிந்து மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேட்டூர்

மேட்டூர் தொழில்பேட்டையில் தொழிற்சாலைகளில் கருப்பு கொடியை கட்டி உற்பத்தியாளர்கள் தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.இது தொடர்பாக மேட்டூர் அணை சிறுதொழில் அதிபர் சங்க தலைவர் மாதப்பன் கூறுகையில், மின்கட்டணம் உயர்வினை ரத்து செய்வதற்கு பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

இந்த மாதம் 16-ந் தேதி சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. சிறு, குறு தொழில்கள் சொத்துவரி ஏற்றம், ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் நலிவடைந்து ள்ளது. இதனால் தொழில்நிறுவனங்கள் பிச்சினைகளை சந்தித்து வருகின்றன. எனவே தமிழக அரசு தனிகவனம் செலுத்தி கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்றார்.


Next Story