ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு
x

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் ஆனேக்கல் தாலுகா தலைவர் கஜேந்திரா தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், திடீரென காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று எழுதப்பட்டிருந்த உருவ பொம்மையை அவர்கள் தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அத்திப்பள்ளி போலீசார் உருவபொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மறியல் போராட்டத்தில், 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினரின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story