பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா
வத்தலக்குண்டுவில் கோவில் திருவிழாவையொட்டி முத்துமாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தது.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்தது.
வத்தலக்குண்டு பிலீஸ்புரம், மெயின்ரோடு, காளியம்மன் கோவில் பகுதி, சந்தை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் அம்மன் பவனி வந்தது. அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2-ம் நாளான நேற்று பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தனர். பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவுக்கு வந்திருந்த ஒட்டகத்தில் சிறுவர்-சிறுமிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். விழாவைெயாட்டி கலைநிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story