கூடுதல் விலைக்கு விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை
கூடுதல் விலைக்கு விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.
கூடுதல் விலைக்கு விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.
பருத்தி விதை
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் காய்புழு எதிர்ப்பு தன்மை உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி விதைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வீரிய ஒட்டு ரக பருத்தி விதை விற்பனை செய்ய மத்திய அரசு விலை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விற்பனை நிலையங்களில் வீரிய ஒட்டுரக பருத்தி விதைகள் 47.5 கிராம் ரூ.853-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளும் இந்த விலையில் பருத்தி விதை வாங்க வேண்டும்.
நடவடிக்கை
அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் தொகைக்கு விதை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதை விற்பனையாளர்கள் பருத்தி, இதர விதைகள், வீரிய மக்காச்சோளம், வீரிய சோளம், கம்பு போன்றவை விதை பாக்கெட்டில் உள்ள அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளும் பாக்கெட்டில் உள்ள அதிகபட்ச விற்பனை விலையை கண்காணித்து விதைகளை வாங்க வேண்டும். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விதைகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.