நீதிபதிகள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள்; முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை
நீதிபதிகள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பெண் வழக்கறிஞர், நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபரின் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.
அப்போது, எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டனர். மேலும், இணையதள குற்றங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்கவும் வேண்டும். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவ.2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மேலும், நீதிபதிகள், அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என நீதிபதி தெரிவித்தார்.