மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2023 12:00 AM IST (Updated: 9 Jun 2023 1:11 PM IST)
t-max-icont-min-icon

மரங்களில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு சொந்தமான பொது இடங்கள் மற்றும் சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள மரங்களில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள் சார்பாக அரசு அனுமதியின்றி ஆணி அடித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை தாங்களே அகற்றிட வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்று சாலையோர மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்யும் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story