தெருமுனை விளக்க கூட்டம்
கடையம் அருகே தெருமுனை விளக்க கூட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் நெடுந்தெருவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், பொது சிவில் சட்டம் அவசியமா? என்ற தலைப்பில் தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது. ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர், கவுரவ ஆலோசகர் முகம்மது கமாலுதீன், ஒன்றிய செயலாளர் காதர் மைதீன், வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பீர்முகமது, நகர துணை செயலாளர்கள் முகம்மது இஸ்மாயில், முகமது யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரைமரி செயலாளர் சாகுல் ஹமீது காசியார் வரவேற்றார்.
நெல்லை மண்டல மகளிர் அணி அமைப்பாளர் சபுரா பேகம், முஸ்லிம் லீக் அமைப்பாளர் கட்டி அப்துல்காதர், தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் பேசினர். கூட்டத்தில், திருமலையப்பபுரம் முதல் கோவிந்தப்பேரி வரையுள்ள சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும், கடையத்தை தனித்தாலுகாவாக தரம் உயர்த்த வேண்டும், கடையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 100 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முகம்மது யாகூப், மகளிரணி பொறுப்பாளர் நாகூரம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மசூது நன்றி கூறினார்.