எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாயல்குடி,
சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாலஸ்தீன நாட்டிற்காக உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும், இந்தியா பாலிசி என மக்களுக்காக ஆதரவை தொடர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சு பீர், துணை தலைவர் மீரான் முகைதீன் மன்பஈ, மாவட்ட செயலாளர்கள் காஜா முகைதீன், போகலூர் செய்யது இப்ராஹிம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகீம் முகம்மது, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ரஷீத் கான், தொகுதி செயலாளர் செய்யது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முகம்மது இம்ரான், மாவட்ட தலைவர் கன்சூல மஹரிபா, மாவட்ட செயலாளர் ஜெஸிரா, பரமக்குடி தொகுதி செயற்குழு உறுப்பினர் முகம்மது சலீம், கடலாடி ஒன்றிய தலைவர் நூர் முகம்மது, முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் அம்ஜத் கான், கமுதி ஒன்றிய செயலாளர் நவாப் இப்ராஹிம், சாயல்குடி நகர தலைவர் நவாஸ் கான், நரிப்பியூர் நகர தலைவர் முகைதீன், முதுகுளத்தூர் நகர தலைவர் காதர் சுல்தான், விவசாய அணி மாவட்ட செயலாளர் உதுமான், அபிராமம் நகர் தலைவர் மைதீன் நெயினார், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால், சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.