'மாண்டஸ்' புயல்': 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்


மாண்டஸ் புயல்: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 9 Dec 2022 9:32 AM IST (Updated: 9 Dec 2022 9:37 AM IST)
t-max-icont-min-icon

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே கனமழை பொழியும் என்பதால் செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story