புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மீட்பு படை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்


புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மீட்பு படை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2022 10:08 AM IST (Updated: 8 Dec 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


Next Story