அதியமான்கோட்டையில் சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு


அதியமான்கோட்டையில் சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சென்றாய பெருமாள் கோவில் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர். கல்வெட்டு சிதிலம் அடைந்திருந்ததால் அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள் தெளிவாக கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. ஏரியை ஒட்டியுள்ள நிலத்தை அளந்து அதன் எல்லையை குறிக்கும் வகையில் கல்நட்டு கொடுத்த தகவலை இந்த கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறுகையில், இது ஒரு தான கல்வெட்டு, நிலக்கிரைய கல்வெட்டு என்றும் குறிப்பிடலாம். இதில் காணக்கூடிய பரக்கரமங்கலம் என்பது எந்த பகுதி என்பது இதுவரை தெளிவில்லாமல் உள்ளது. இந்த கல்வெட்டின் மீதி பகுதி கிடைத்தால் அதில் எழுதப்பட்டுள்ள முழுமையான தகவலை பெற முடியும். சோழர்கள் ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் நிலவிய நில தான முறை குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கு இந்த கல்வெட்டு பயன்படும் என்றார்.


Next Story