கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கூடலூரில் கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
கூடலூரில் பள்ளி அருகே பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், காளிமுத்து மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர் கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தினி (வயது 29), கோடாங்கிபட்டியை சேர்ந்த மதன் (19) ஆகிய 2 பேரை போலீசாா் கைது செய்தனர். மேலும் 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.