காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு
திண்டுக்கல் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் ரெயில்நிலைய பகுதி, ரவுண்டு ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அந்த சுவரொட்டிகளில் ' மே-21 மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் தீவிரவாதியா?, தியாகியா?. திராவிட கட்சிகளே உங்கள் தலைவருக்கு இப்படி நேர்ந்தால் பாராட்டி கொண்டாடுவீர்களா? ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகளால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது.Stir by the poster pasted by the Congress partyStir by the poster pasted by the Congress party
Related Tags :
Next Story