தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை


தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2023 7:15 PM (Updated: 21 Oct 2023 7:15 PM)
t-max-icont-min-icon

தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:-

கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். 26-ந் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வரும் பணியாளர்களின் வாகனங்கள் அலுவலக வளாகத்தில் நிறுத்த அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வெளியேற்றப்படும். மேலும் தலைக்கவசம் அணியாத பணியாளர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story