ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவாரூர்

திருவாரூர் அருகே கீழகூத்தங்குடியில் 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ேரஷன் கடைகள்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர ரேஷன் கடைகள் 579, பகுதி நேர ரேஷன் கடைகள் 156 என மொத்தம் 735 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் சார்பில் பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடைகள், பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.

8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது

இந்தநிலையில் திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சியில் கீழகூத்தங்குடி கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு தனியாக ஒரு ஆழ்குழாய் போர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் சாய்வுதளம், கழிவறை, கைபம்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த கட்டிடம் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கட்டிடம் மிகவும் சேதமடைந்து வருகிறது. மேலும் சாய்வு தளம் சிதைந்தும், கட்டிடத்தின் ஜன்னல், ஷெட்டர்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. ஆழ்குழாய் போர் பயன்படுத்தப்படாமல் பயனற்று இருக்கிறது. எனவே இந்த ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக திறக்க நடவடிக்கை

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,

கீழகூத்தங்குடி, அன்னுக்குடி ஆகிய கிராமங்களில் சுமார் 200 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடூருக்கு தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை ஏற்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை கட்டிடம் திறக்கப்படாம்ல் உள்ளது. இதனால் கட்டிடம் சேதமடைந்து வருகிறது.

எனவே இந்த கட்டிடத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story