எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அழகியமண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி
தக்கலை:
அழகியமண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
குமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி எஸ்.டி.பி.ஐ.கட்சி மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அழகிய மண்டபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் சத்தார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாதிக் அலி, நெல்லை மண்டலத் தலைவர் சுல்பிக்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள், ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
Related Tags :
Next Story